அரிசி ஆலை உரிமையாளரை கடத்திய 4 நபர்கள் செல்போன் சிக்னல் மூலம் தொடர்ந்து சென்று கைது..

0 421

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அரிசி ஆலை உரிமையாளரை காரில் கடத்திய நபர்களை செல்போன் சிக்னல் மூலம் பின்தொடர்ந்து சென்று பெரம்பலூரில் சுற்றி வளைத்து பிடித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெங்கடம்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வரும் உதயகுமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சூரியகுமார் என்பவரிடம் 98 லட்சம் ரூபாய்க்கு நெல் வாங்கி, 77 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மீதிப் பணத்தை தர தாமதமானதால், வெள்ளிக்கிழமை அன்று அரிசி ஆலைக்கு மூன்று பேருடன் வந்த சூரியகுமார், உதயகுமாரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடத்தி சென்றதாக, உதயகுமாரின் தந்தை அன்பழகன் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து தென்காசி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தியவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments