அரசுப் பேருந்து மீது மோதிய கார்... ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேர்ந்த விபத்து
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் இருந்த ஏர் பேக் உடனடியாக திறந்ததால் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், அதில் பயணம் செய்த சிறுவன் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சத்தியமங்கலத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நல்லூர் மாதேஸ்வரன் கோவில் பகுதியில் வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த காரின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது.
Comments