திருச்செந்தூர் முருகனுக்கு, சூரனை வதம் செய்த மறுநாள் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது

0 1680

சூரனை வதம் செய்த திருச்செந்தூர் முருகனுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி துவங்கிய கந்தசஷ்டி விழாவில், வியாழனன்று ஜெயந்திநாதராக சூரபத்மனை முருகன் வதம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு குமரவிடங்கனாக எழுந்தருளிய முருகப்பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, தபசு காட்சி மண்டபத்திற்கு சென்ற முருகன் அங்கிருந்த தெய்வானை உடன் வீதி உலா சென்று தோள்மாலை மாற்றிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments