நீர் வழி ஆக்கிரமிப்பு என்றால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அகற்ற வேண்டும் - செல்லூர் ராஜூ

0 491

மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பணிகள் ஏன் மந்தமாக நடக்கிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, நீர்பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைகிளை கூறி இருக்கிறது அப்படி என்றால் மதுரை உயர்நீதிமன்ற கிளையை தான் முதலில் அகற்ற வேண்டும் என்றார்

என்ன கூட்டணியாக இருந்தாலும் இந்த அரசின் மீது இருக்கின்ற வெறுப்புணர்ச்சி காரணமாக கூட்டணியில் சேரும் அனைத்துக் கட்சிகளுமே வெள்ளத்தில் அடித்து செல்ல போகிறது என்ற செல்லூர் ராஜூ, கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், என்ன அர்த்தம் இல்லாத கேள்வி கேட்கிற.? என்று கடிந்து கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments