முருகன் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை வழங்கி தரிசித்த பக்தர்கள்..

0 380

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற சண்முகர் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று இரவு நடைபெற உள்ள திருக்கல்யாண நிகழ்ச்சியை காண குவிந்து வரும் பக்தர்கள், திருக்கல்யாணத்திற்கு மொய் எழுதி, பிரசாதம் வாங்கி சென்றனர்.

முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலையில் நடைபெற்ற முருகப்பெருமான் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகளை ஏராளமானோர் தரிசித்தர்.

ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து முருகனுக்கு காணிக்கை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments