மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

0 656

மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை திமுக அரசு ஒதுக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுவதாகவும், முட்டுக்காட்டில் 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை பெயரை அரசுக் கட்டடங்களுக்கு வைக்க வேண்டு என்றால், திமுக அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments