அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மற்றும் கொலராடோ மாகாணங்களில் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8,064 அடி உயரத்தில் உள்ள குளோரிட்டா மீசா என்ற பகுதியில் பனி மழை கொட்டும் நிலையில், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் ஆங்காங்கே பனியில் குளித்தபடி உறைந்து நிற்கின்றன. மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
Comments