அமெரிக்கா கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

0 656

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வென்ச்சுரா கவுண்டி பகுதியில் மளமளவென பரவியுள்ள தீயை அணைக்க சுமார் 800 வீரர்கள் போராடி வரும் நிலையில், மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுவதாக தீயணைத்துறையினர் தெரிவித்துளனர்.

பாதுகாப்பு கருதி ஏற்கனவே 10,000 பேரை அப்பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா ஆளுநர் கேவின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments