“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

0 1320

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த கட்சியின் மாவட்ட செயலாளரை, குருதி பாசறை தம்பி ஒருவர் குறுக்கே புகுந்து தடுத்ததால், அவரை விரட்டி விரட்டி வெளுத்த காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவேந்திரன் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகுவதாக அறிவித்து அதற்கான செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது குறுக்கே கவுசிக் போல வந்த, குருதி பாசறை படை செயலாளர் நாகராஜ் , தேவேந்திரனிடம் வாக்குவாதம் செய்தார்

கட்சியை விட்டு விலகினால் சீமான் பற்றி பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கும்போதே நாகராஜை தேவேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் விரட்டி விரட்டி தாக்கினர்

நாகராஜுக்கு அடி விழுந்ததுமே அவருடன் வந்திருந்த தம்பிகள் ஓட்டமெடுத்தனர், இதனால் அவர் மட்டும் நாற்காலியை கையில் தூக்கி வீச முயன்றார், அருகில் இருந்தவர்கள் தடுத்ததால் தனியாக சத்தம் போட்டு விட்டு நகர்ந்து சென்றார்.

சம்பவம் குறித்து பேசிய தேவேந்திரன், 6 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சிக்காக சொந்த பணத்தை செலவு செய்து உழைத்து வந்த நிலையில், தன்னிடம் கேட்காமல் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரை சீமான் அறிவித்ததாகவும், மாவட்ட செயலாளரான தன்னாலயே சீமானை சந்திக்க இயலவில்லை என்றும் கட்சியினருக்கு உரிய மரியாதை அளிக்காததால் சீமானின் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments