மது போதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த சஸ்பெண்ட் போலீஸ்கார் ..!

0 483

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் காதலியை ஆடையை கிழித்து ரகளையில் ஈடுபட்டதோடு, மது போதையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை தாக்கி அவதூறாக பேசிய சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

3 வது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கார்த்திக் தாக்கியதாக, அவர் திருமணம் கடந்த உறவு வைத்திருந்த காதலி புகார் அளித்த நிலையில் அரை நிர்வாணமாக காவல் நிலையத்துக்குள் புகுந்தார் கார்த்திக். அங்கிருந்த போலீசாரை இழுத்து தள்ளியதோடு காவல் நிலைய மேஜையில் அமர்ந்து கொண்டு போலீசாரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகின்றது

14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து அழைத்துச்செல்லப்பட்ட போது ஏதோ சாதனை புரிந்ததை போல சஸ்பெண்டு காவலர் கார்த்திக் மீசையை முறுக்கிக் கொண்டே சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments