எதிர்க்கட்சி தலைவர் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - அமைச்சர் மா.சு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தான மருத்துவத்துறை பணிகள் பற்றி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சவாலை விடுத்தார்.
மேலும் மருத்துவர் பணியிடங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளதாக சீமானை கிண்டலடித்தார்.
Comments