மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப், மேற்காசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என லெபனான் நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 3,000-க்கும் மேற்பட்டோரும், காஸாவில் 43,000 க்கும் மேற்பட்டோரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருமாறு இஸ்ரேல் அரசை டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
கடந்த முறை அவர் அதிபராக இருந்தபோது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments