தி.மு.க கூட்டணி கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு - ஜெயக்குமார்
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
82 மாவட்ட செயலாளர்கள், பிற மாநில அதிமுக செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணி, விஜய் கட்சி தொடங்கி உள்ள நிலையில் அதன் தாக்கம் மற்றும் கூட்டணிக்கான வியூகம் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments