மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை - போலீசார் விசாரணை

0 582

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

செல்லூர் பெரியார் தெருவைச் சேர்ந்த  வாசுதேவனின் மகன் லட்சுமணன்  மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மதுபோதையில் தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவும் மது போதையில் தகராறு செய்த மகன் லட்சுமணனை வீட்டு மொட்டை மாடியில் வைத்து தந்தை வாசுதேவன் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக தெரிவித்து செல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments