காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

0 1806

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுக்குள் பதுங்கி இருந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் சுற்றி வளைத்த நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் அவனுக்கு காலில் மாவுக்கட்டு போடப்பட்டது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள காட்டுப்பகுதிகளில் தனியாக ஆடு, மாடு மேய்க்க செல்லும் பெண்களிடம் மர்ம ஆசாமி ஒருவர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு நகைபறித்து சென்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியே சொன்னாலும் பலர் புகார் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் குருந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது கத்தியை காட்டி மிரட்டி அவரது காதில் அணிந்திருந்த தங்கத்தோட்டை அந்த மர்ம ஆசாமி பறித்து சென்றான். அவன் கல்லல் கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பதும் அவன் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு பலாத்கார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட தனது உறவுக்கார இளைஞர் என்றும் போலீசாருக்கு அந்தப்பெண் அடையாளம் காட்டினார்.

இதையடுத்து தேவக்கோட்டை போலீசாரும் , சுற்றுவட்டார கிராமத்து இளைஞர்களும் சீரியல் காமுகன் ராஜ்குமாரை தேடி வந்தனர். தீபாவளியை கூட கொண்டாட செல்லாமல் கடந்த 4 நாட்களாக தீவிரமாக தேடிய போலீசார் தேவக்கோட்டை பழைய பாலம் பகுதியில் பதுங்கி இருந்த சீரியல் காமுகன் ராஜ்குமாரை சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்வதற்காக பாலத்தில் இருந்து குதித்த போது அவனது இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் அவனை தூக்கிச்சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர்.

தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனது உறவுக்கார பெண் ஒருவரை மிரட்டி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு பதிலாக தன்னிடம் தனியாக சிக்கும் பெண்களிடம் வயது பேதம் இல்லாமல் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்த ராஜ்குமார், தனது செலவுக்கு அவர்களின் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச்சென்றதாக வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தேடிக் கொண்டிருக்கும் போதே, மேலும் இரு பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ராஜ்குமார், தனியாக வந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றதாகதெரிவித்த போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜ்குமாரை சிகிச்சைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments