கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

0 796

தமிழ்நாட்டில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சுய தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தக் காளான் வளர்ப்புக்கான ஒருநாள் பயிற்சி கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பாக, மாதம் தோறும் 5ஆம் தேதியில் வழங்கப்படுகிறது.

இங்கு காளான் வகைகள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான தட்ப வெப்பத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட்டு, உரிய ஆராய்ச்சிக்குப் பின் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

காளான் வளர்ப்பு குறித்தும் அதுகுறித்த பயிற்சி குறித்தும் பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் நோயியியல் துறை பேராசிரியர் திரிபுவனமாலா, வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் விளையும் காளான்களைக் கொண்டு வந்து, அவை உண்ணத் தக்கவையா என ஆய்வு செய்த பின் சாகுபடி செய்வதாகக் குறிப்பிட்டார்.

காளான்களில் உள்ள சத்துகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்தும் பேராசிரியர் திரிபுவனமாலா விளக்குகிறார்.

தற்போதுள்ள சூழலில் காளான்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறிய பேராசிரியர், எந்தெந்த காளான்களை எத்தனை நாட்களுக்கு சேமித்து வைக்கலாம் என்பது குறித்தும் விளக்கினார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் 5ஆம் தேதி வழங்கப்படும் காளான் வளர்ப்புப் பயிற்சியில் சேர 590 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments