சென்னை பெருங்களத்தூரில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்து.!

0 702

சென்னை அருகே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வண்டலூர் நோக்கி சென்ற காரை போக்குவரத்து போலீசார் திடீரென மறித்தபோது கார் ஓட்டுநர் பிரேக் அடித்ததால் பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் சோதனைக்காக வாகனங்களை திடீரென வழிமறிப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் காரை மறித்தபோது நிகழ்ந்த விபத்தை வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments