மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்
இன்றைய கால கட்டத்தில் நகர்மயமாதல்,தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கிராமப்புறங்களில் செய்யப்பட்டு வரும் விவசாயமே குறைந்து வரும் நிலையில் நகர்புறங்களில் விவசாயம் என்பது இயலாத ஒன்று. இருந்தாலும் ஆர்வமிக்க நகரவாசிகள் சமையலுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை தங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்வதற்கு மாடி தோட்ட விவசாயம் வரமாக அமைந்துள்ளது...
பலர் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை மாடி தோட்ட விவசாயம் மூலம் வீட்டின் மொட்டை மாடியிலேயே உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் தனது வீட்டின் மாடியில் கத்தரிக்காய்,புடலை,தக்காளி,முருங்கை,கொத்தவரங்காய்,அவரைக்காய்,முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள்,கீரை வகைகள்,மஞ்சள் செடி,மல்பெரி போன்றவற்றை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஸ்ரீபிரியா...
மாடி தோட்டம் அமைப்பது மிகவும் எளிது எனவும் மண் நிரப்புவதற்கான தொட்டிகள்(Grow bags),சாக்கு பைகள் அல்லது பிளாஸ்டிக் பைகள் இருந்தால் போதும் விதைகளை கொண்டு மாடி தோட்டம் அமைத்து விடலாம்.தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாடி தோட்டம் அமைப்பவர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் ஆறு வகையான காய்கறி பாக்கெட்டுகள், விதைகள், செடி பைகள், தேங்காய் நார் கழிவுகள், உயிர் உரங்கள் ஆகியவை அடங்கிய மாடி தோட்ட கிட் டும் வழங்கபடுகிறது.
அதுமட்டுமின்றி மாடி தோட்டத்தில் சொட்டு நீர் பாசனதிற்கு தேவையானவற்றையும் மானிய விலையில் அரசு வழங்குவது குறிப்பிடத்தக்கது. மாடி தோட்ட கிட் மற்றும் இதர சலுகைகளை தோட்டக்கலைத்துறையின் அதிகார பூர்வ பக்கத்தில் ஆன்லைனில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
Comments