தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

0 855

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? உலகமே எதிர்பார்க்கும் அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்?

ஜனநாயகக் கட்சியைச் ((democratic party)) சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியைச் ((republican party)) சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி, இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கவுள்ளது. மொத்தம் 24 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி இதுவரை 7 கோடியே 70 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்கள் தொகை எண்ணிக்கையை பொறுத்து மாகாண வாரியாக, தேர்வாளர் குழு இரண்டு கட்சி சார்பிலும் முன்கூட்டியே நியமிக்கப்படுவர். இரண்டு கட்சி சார்பிலும் மாகாண வாரியாக நியமிக்கப்படும் தேர்வாளர் குழுவினரின் எண்ணிக்கை மொத்தம் தலா 538. இதில் 50 மாகாணங்களுக்குமான தலா 2 செனட்டர்கள் வீதம் என 100 பேர் அடங்குவர். ((state wise electoral votes - மாகாண வாரியாக இணைக்கவும்)) கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் அதிகபட்சமாக 54 தேர்வாளர் வாக்குகள் உள்ளன. வயோமிங், அலாஸ்கா, வடக்கு டகோட்டா மற்றும் வாஷிங்டன் டிசி போன்ற குறைந்த மக்கள்தொகை கொண்ட சில மாகாணங்களில் குறைந்தபட்சம் மூன்று தேர்வாளர் வாக்குகளே உள்ளன.

ஒவ்வொரு மாகாணத்திலும், டிரம்ப் அல்லது ஹாரிஸ் இருவரில் பொதுமக்களின் வாக்குகளை அதிகம் யார் பெறுகிறார்களோ, அதன் அடிப்படையில், அவர்களது கட்சியால் நியமிக்கப்பட்ட தேர்வாளர் குழுவினர் அனைவரும் வாக்களிக்கும் உரிமையை பெறுகின்றனர். குறைவாக வாக்குபெறும் கட்சியால் நியமிக்கப்பட்ட தேர்வாளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுகின்றனர். கட்சி மாறி வாக்களிக்கும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. உதாரணத்திற்கு, கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50 சதவீதற்கு அதிகமான வாக்குகளை பெற்றால், அக்கட்சியால் நியமிக்கப்பட்ட 54 தேர்வாளர்களும் அதிபரை தேர்ந்தெர்ந்தெடுக்கும் தகுதியை பெறுவர். பெரும்பான்மைக்கு 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வாளர்களின் வாக்குகளை பெறுபவர்களே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

பெரும்பாலான மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட மாகாணங்கள் எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடும் என்பதால் அவற்றை "ஸ்விங் மாகாணங்கள்" என்று அழைக்கப்படுகிறன. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடகரோலினா ஆகியவை இந்த முறை ஸ்விங் மாகாணங்களாக பார்க்கப்படுகிறது.

 

வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிவிடும் என்பதால், இந்தியா நேரப்படி புதன்கிழமைக்குள் அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பது உறுதியாக வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments