எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

0 1300

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் தையல் தொழிலாளி, இவரது மனைவி லோகேஸ்வரி நத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கோபி கிருஷ்ணனும், மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் வழக்கம்போல் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு கட்டிலில் படுத்து உறங்க சென்று உள்ளனர்.

தாய் லோகேஸ்வரியும் இரண்டாவது மகன் யஸ்வந்தும் கீழ் வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். காலையில் எழுந்த லோகேஸ்வரி மருத்துவமனைக்கு செல்வதற்காக தயாராகி உள்ளார். வெகு நேரமாகியும் மாடியில் இருந்து தனது கணவரும் மகனும் எழுந்து கீழே வராததால் மாடிக்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது கணவன் மகன் இருவரும் படுத்திருந்த பழைய இரும்பு கட்டில் கால் சரிந்து இருவரது கழுத்தையும் இறுக்கிய நிலையில் அவர்கள் உயிரிழந்து சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

 உடனடியாக லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரும்பு கட்டிலின் கால்களில் இருபுறம் உள்ள நான்கு போல்ட்டுகளில் உள்புறம் உள்ள 2 போல்ட்டுகள் இல்லாததால், தலைப்பகுதிக்கு மேல் உள்ள கம்பி பாரத்தால் சுழன்று இருவரின் கழுத்துப்பகுதியில் வேகமாக அடித்து நசுக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருக்க , பழைய இரும்பு கட்டிலில் படுத்திருப்பவர்கள் கட்டில் கால்களுக்கு பொறுத்தப்பட்டுள்ள போல்டு நட்டுக்கள் சரியாக உள்ளனவா? என்பதை முன் எச்சரிக்கையாக அவ்வப்போது சரி பார்த்துக் பராமரித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் காவல்துறையினர். இரும்பு கட்டிலை உற்பத்தி செய்பவர்கள், இப்பாதுகாப்பு குறைப்பாட்டை நீக்க, கூடுதலாக குறுக்காக இணைப்பு கம்பியை பொறுத்துவது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments