சிவகங்கை அருகே அ.தி.மு.க பிரமுகரை வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை

0 357

சிவகங்கை அருகே உள்ள நாட்டாங்குடியில் அ.தி.மு.க கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமது பெட்டிக்கடையை திறக்கச் சென்ற 72 வயது கணேசனை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்றதோடு மேலும் ஒருவரையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

விசாரணையில், அப்பகுதியில் நடைபெற்ற விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி எம்.எல்.ஏ செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments