மேற்குத் தொடர்ச்சி மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் பகுதி நீரோடையில் குளித்த 9 பேர், திடீர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர் மழை காரணமாக நீரோடைப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வனத் துறையைச் சேர்ந்த ஒரு சிலரின் உதவியோடு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
Comments