பிரேசிலில் முன்னாள் காவல் துறை அதிகாரிகளுக்கு 78 ஆண்டு சிறைத் தண்டனை..

0 111

பிரேசில் நாட்டில் இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளில் ஒருவருக்கு 78 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 59 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2018-ஆம் ஆண்டு, காரில் சென்றுகொண்டிருந்த  நகர சபை உறுப்பினர் மரியேல் பிராங்கோவையும் அவரது ஓட்டுநரையும் சுட்டுக்கொன்ற வழக்கில் பிரேசில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தலைநகர் ரியோ-டி-ஜெனீரோ சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் கறுப்பின மக்களுக்கு வீடு உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்காகப் போராடி வந்த 38 வயதான மரியேல் பிராங்கோவின் மரணம், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments