நாகப்பட்டினத்தில் த.வெ.க. நிர்வாகியை கோணி ஊசியால் குத்திய நபர் கைது - போலீசார் தகவல்
நாகப்பட்டினத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக கேட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ராஜா என்பவரின் வயிற்றில் கோணி ஊசியால் குத்திவிட்டு தலைமறைவான நபரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
ராஜாவின் அண்ணன் மகன் மற்றும் ஜெயக்குமார் என்பவரின் உறவினர் மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானதில் இருதரப்பினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை பார்க்க நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வந்த ராஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜெயக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கோணி ஊசியை எடுத்து ராஜாவின் வயிற்றில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்
Comments