சென்னை அருகே சென்டர் மீடியனில் கார் மோதி சின்னத்திரை நடிகர் மகன் உயிரிழப்பு

0 813

சென்னை வேளச்சேரியில் நிகழ்ந்த கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக் மகன் லித்திஷ் உயிரிழந்தார்.

ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான லித்திஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள விளையாட்டு திடலுக்கு  காரில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வேளச்சேரியில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லித்திஷ் உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments