நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை

0 637

தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை ஒட்டி இரண்டாவது நாளாக நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மின்னொளியால் ஒளிவீசின.

டெல்லியின் பல்வேறு பகுதிகள் விக்யான் பவன், கான்மார்க்கெட், ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவில் , சிக்னேச்சர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அலங்காரம் கண்கவரும் விதத்தில் இருந்தது

மும்பையில் பாந்த்ரா-வோர்லி இடையிலான கடல் பாலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் பட்டாசுகள் பெரிய அளவில் வெடிக்கப்பட்டு கண்கவரும் வாணவேடிக்கை நடத்தப்பட்டது

அயோத்தியில் ராமர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கண்கவரும் வண்ண மின்விளக்குகள் இரவைப் பகலாக்கின
சண்டிகர், கவுஹாத்தி, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மின்னொளி காட்சிகள் கண்களில் தீபாவளியின் பெருமையை உணர்த்தின

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments