சென்னை, அம்பத்தூர் அருகே போலி மருத்துவரை கைது செய்த போலீசார்
மருத்துவ படிப்பு படிக்காமல் வேறொரு மருத்துவரின் பதிவு எண்ணை காட்சிப்படுத்தி சென்னை, அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டில் கிளினிக் வைத்து அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூரை சேர்ந்த குகநாதன் என்பவர் போலி மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை இரவு நடத்திய சோதனையில் குகநாதன் மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியது தெரியவந்ததாக கூறப்படுகிறது
Comments