லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக தேர்வுனார் நைம் காசிம்
ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, கடந்த மாதம் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக நைம் காசிம் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளாக அந்த அமைப்பின் துணை தலைவராக இருந்துவரும் நைம் காசிமால், ஹசன் நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்ப முடியாது என லெபனான் மக்களிடையே கருத்து நிலவிவருகிறது.
விரைவில் அவரையும் அழித்துவிடுவோம் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் விதமாக, வெகு நாட்கள் அவர் தாக்குப்பிடிக்க மாட்டார் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments