தீபாவளியைக் கொண்டாட வெளியூர் சென்ற மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

0 465

தீபாவளியைக் கொண்டாட வெளியூர் சென்ற மக்களால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

 

மீஞ்சூர் -கிளாம்பாக்கம் வெளிவட்ட சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ஜிஎஸ்டி சாலையில்  போக்குவரத்து நெரிசல் காரணமாக மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரும் வெளிவட்ட சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்றார் போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றன,சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் கார்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments