அரியலூரில், புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெட் பஸ் போன்ற தனியார் முன்பதிவு செயலியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்றார்.
Comments