ராயப்பேட்டையில், அண்ணா பேரவை தொழிலாளர்களுக்கு நிதி உதவி காசோலையை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

0 461

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்தார். 

தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கொள்கையை கொண்டவர்கள் என்றால், அவர்கள் ஏன் தனித்தனியாக கட்சி நடத்த வேண்டும்? எனவும் இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார்.

திமுக - பாஜக இடையே மறைமுக டீலிங் இருப்பதாக தாங்கள் சொன்னதை இப்போது அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் இ.பி.எஸ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments