ஐ.நா நிவாரணக் குழுவை இஸ்ரேலில் செயல்பட தடை விதித்தது அன் நாட்டு அரசு

0 507

ஐ.நா நிவாரணக் குழுவினர் தங்கள் நாட்டில் செயல்பட தடை விதிக்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

இது தொடர்பான தடைச் சட்ட மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேல் நாட்டுக்குள் இருந்துகொண்டு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக ஐ.நா. குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட அந்நாடு தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் வழியாக காசாவுக்கு நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் ஐ.நா குழுவினர் செயல்பட எந்தத் தடையும் இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தடைச் சட்டத்தால் காசாவில் உள்ள சுமார் 6 லட்சம் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படும் என, தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டாம் என ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையையும் மீறி மசோதாவை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments