ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

0 1978

2 குழந்தைகள் இருக்கும் நிலையில் காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கொடுத்த இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் ஒருவர், காதலனுடன் சேர்ந்து கணவனை தலையனையால் அழுத்தி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

தன்னை ஒரு சர்வதேச மேக் ஓவர் ஆர்டிஸ்ட்டாக நினைத்துக் கொண்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வந்த பிரதிமா என்பவர் தான் போலீசாரால் கொலை வழக்கில் கைதானவர்..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அஜீக்கர் கிராமத்தை சேர்ந்த காதல் தம்பதிகளான பாலகிருஷ்ண சல்யாண் - பிரதிமா ஆகியோருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக அடிக்கடி நோயினால் அவதிப்பட்ட பாலகிருஷ்ணன், ஒரு கட்டத்தில் மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள மனமின்றி மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அன்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தனது கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக தனது சகோதரர் சந்தீப் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்த பிரதிமா, கணவரின் உடலை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் பாலகிருஷ்ணாவின் முகத்தில் நகக்கீரல்கள், ரத்தக்காயங்கள் காணப்பட்டதால், தனது சகோதரியை தனியாக அழைத்து சந்தீப் விசாரித்துள்ளார்.

அண்ணன் நம்மை காட்டிக் கொடுக்க மாட்டார் என்று நம்பிய பிரதிமா, நோயினால் அவதியுற்ற கணவனை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார் , அவர் கூறிய தகவலை அப்படியே போலீசுக்கு தெரிவித்த சந்தீப், தனது சகோதரியை பிடித்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இதையடுத்து பாலகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பிய போலீசார் பிரதிமாவிடம் விசாரணை நடத்தினர். இதில் பல நாள் திட்டம் போட்டு கணவரை கொலை செய்த பிரதிமாவீன் கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவரின் வருமானம் போதாததால் பிரதிமா உள்ளூரில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். ஏராளமான பெண்கள் வந்து சென்ற நிலையில் தனது மேக்கப் திறமையை உலகம் அறிந்து கொள்ள வசதியாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வாக பதிவிட்டதால் வெளியூர்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர்.

பிரதிமாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திலீப் என்ற இளைஞரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நேரில் சந்தித்து நெருங்கிப்பழகி வந்த நிலையில் தனது புதிய காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு உணவில் கலந்து கொடுப்பதற்கு ஸ்லோபாய்சன் வாங்கிக் கொடுத்துள்ளார் திலீப், அதனை தினமும் சாப்பிட்டதால் கடுமையாக உடல் நலப்பதிப்புக்கு உள்ளான பாலகிருஷ்ணா, உடுப்பி, மங்களூரு, பெங்களூரு என பல நகரங்களில் உள்ள உயர்தர மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றதாக கூறப்படுகின்றது.

அவருக்கு மஞ்சள் காமாலை மட்டுமின்றி , உடலில் பல்வேறு வியாதிகள் சேர்ந்திருப்பது தெரிய வந்ததால் இனி உயிர் பிழைக்க முடியாது எனக்கருதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இரவு பொறுமை இழந்த பிரதிமா, தனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காதலனுடன் சேர்ந்து தலையனையை வைத்து அழுத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்

திருமணம் கடந்த தவறான உறவு கொலைகாரி என்ற பட்டத்துடன் பிரதிமாவை சிறையில் தள்ளியுள்ளதாக தெரிவித்த போலீசார் , தவறு செய்தது சகோதரி என்று தெரிந்தும் அதனை மறைக்க முயலாமல் போலீசாரிடம் தகவல் சொன்ன சந்தீப்பை பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments