த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறார் !!
விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறும் த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மாநாட்டு திடலுக்குள் பிற்பகல் 2 மணியிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை 6 மணியிலிருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மாநாட்டு மேடைக்கு அருகில் முன் வரிசையில் முக்கிய பிரமுகர்களுக்காக 500 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் உட்பட முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கேரவன்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் விஜய்யின் திரையுலக நண்பர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Comments