மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!
கனமழை காரணமாக மதுரையின் செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆய்வுக்கு வந்த இடத்தில் அமைச்சர் மூர்த்தியை நேருக்கு நேராக சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வெள்ள நீரை வடியவைக்க சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்..
மதுரையில் பெய்த கனமழை காரணமாக, செல்லூர் கட்ட பொம்மன் நகர் , பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கன்மாய் நீர் வெள்ளம் போல சூழ்ந்து கொண்டது.
சில இடங்களில் இடுப்பு அளவுக்கும், சில இடங்களில் முழங்கால் அளவுக்கும் தண்ணீர் நின்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்
வெள்ள நீரை வடிய வைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி வெள்ள நீரில் நடந்து வரும் போது சற்று தடுமாற அருகில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்துக் கொண்டனர்
பின்னர் அமைச்சர் மூர்த்தி , மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ள நீரை வடிய வைக்க சில ஆலோசனைகளை வழங்கினார்
“நம்மை எல்லாம் வாழ வைத்த பெரியாரின் பெயரில் உள்ள வீதியிலேயே இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது “ என்று அமைச்சர் மூர்த்தியிடம், செல்லூர் ராஜு தெரிவித்தார்
வடிகால் பணிகளுக்காக அரசு அறிவித்துள்ள 85 கோடி ரூபாயை கேட்டுப்பெற்று உடனடியாக கால்வாய்களை தூர்வாரி வெள்ள நீர் இனி வரும் காலங்களில் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சிதலைவரிடம் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்
பிரீத்(())
தொடர்ந்து அங்கிருந்த திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவை சிரித்தபடியே சமாதானப்படுத்தி விட்டு மற்ற இடங்களை பார்வையிட சென்றனர்.
Comments