மதுரை , கீழ்மட்டையான் கிராம கண்மாயில் மிதந்த சடலங்கள் - மீட்டு எடுத்து போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழ்மட்டையான் கிராமத்தில் உள்ள கண்மாய் நீரில் மிதந்த தந்தை, மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை கண்மாய்க்கு வந்த ஊர்மக்கள், சடலங்கள் மிதப்பதை பார்த்து காவல் துறைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேல மட்டையான் கிராமத்தை சேர்ந்த அழகர் தனது மகனுடன் குளிக்கும்போதோ, அல்லது சிறுவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்றபோதோ ஆழமான பகுதியில் மூழ்கியிருக்கலாம் என்றும், உடல்கள் அழுகிய நிலையில் உள்ளதால் நேற்றே இறந்திருக்கலாம் எனவும் காடுபட்டி போலீசார் தெரிவித்தனர்.
Comments