திருமலைக்கு படிக்கட்டு பாதை வழியாக வரும் 'நீரிழிவு, சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் உள்ளவர்கள் நடந்து செல்வதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்
நீரிழிவு நோயாளிகள், சுவாசப் பிரச்சனைகள், முழங்கால் வலி உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு படிக்கட்டு பாதை வழியாக நடந்து செல்வதை தவிர்க்கும்படி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
பக்தர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து தேவஸ்தானம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
நடைபாதையில் ஆயிரத்து 500-வது படிக்கட்டு, காளி கோபுரம், ராமானுஜர் சன்னதி ஆகிய இடங்களில் மருத்துவ சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவ மையங்களில் 24 மணி நேரமும் இலவச சிகிச்சை பெறலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Comments