வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

0 213

சென்னை வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றஞ்சாட்டிய மக்கள் குடியிருப்பு முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, மூலகொத்தளத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடடத்தின் 4 வது மாடி தரை தளத்தில் வெறும் கையால் தோண்டினால் சிமெண்டு பூச்சு மணல் போல வரும் காட்சிகள் தான் இவை..!

2018 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஜெயக்குமாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2020 ஆம் ஆண்டு கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டாலும், 2 ஆண்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடந்த 1044 குடியிருப்புகளை
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சன்சேடு இல்லாமல் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கனமழையின் போது அனைத்து தளங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி உள்ளதாக அங்கு குயிருக்கும் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்

மேல் மாடி வரை தண்ணீர் ஏறுவதில்லை என்றும் சில வீடுகளில் ஜன்னல்களும், பாத்ரூம் உபகரணங்களும் பெயர்ந்து கையோடு வந்து விட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்

காலையில் ஒருமணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே லிபட் இயக்கப்படுவதாகவும் மற்ற நேரங்களில் 11 மாடிகளையும் படி வழியாகவே ஏறி கடக்க வேண்டி இருப்பதால கடுமையாக அவதியுறுவதாக வேதனை தெரிவித்தனர்

தரமற்ற கட்டுமானத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு இயக்கத்தினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் ,குடியிருப்பு முன்பு கூடிய மக்களை அதிகாரிகளும் போலீசாரும் சமாதானப்படுத்தினர்

கட்டுமானத்தை விரைந்து சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments