பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்திற்கு, 4 மாடி கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு 7 மாடி வரை கட்டியதே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஹோரமாவு அகாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மதியம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் 20 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் 7 பேர் சடலமாகவும், 13 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
ஹனி, பிராடி என்ற இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Comments