ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!
மதுரை புறநகரில் உள்ள கன்மாய்கள் நிரம்பி வழிவதால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் கரிசல் குளம் மற்றும் விளாங்குடி கண்மாய் நிரம்பியது மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் விளாங்குடி கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், செல்லவழியின்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.
பாண்டியன் நகர், திருமால் நகர் , அடமந்தை சாலை முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால், குழந்தைகள் முதியவர்களை படகு ஒன்றில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்றனர்
வெள்ள நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்கள் நீந்திச்சென்றதால் நீருக்குள் இறங்கி நடக்கவே அச்சமாக இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்
வெள்ளச்சேதத்தை பார்வையிட வந்த திமுக எம்.எல்.ஏ தளபதியை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
Comments