மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..
மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழையால் செல்லூர் கண்மாய், ஆணையூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் பாய்ந்த வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.
செல்லூர் 27 ஆவது வார்டுக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்கியது.
Comments