மெரினா கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ்... டெண்டர் கோரிய சென்னை மாநகராட்சி

0 827

கடற்கரைகளின் பாதுகாப்பு, குளியல் நீரின் தரம் உள்ளிட்ட 33 அளவுகோல்களின் அடிப்படையில் டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் வழங்கப்படும் நீலக் கொடி சான்றிதழை மெரினா கடற்கரைக்கு பெற டெண்டர் கோரியதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுமார் 5 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியதாகவும், சர்வதேச தரநிலைகளை எட்டுவதற்காக கடற்கரை விழிப்புணர்வு, அழகியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments