தனியாக வசிக்கும் முதிய தம்பதியை கொடூரமாகத் தாக்கி நகைப் பறிப்பு

0 848

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ஓய்வுபெற்ற தனியார் சர்க்கரை ஆலை அதிகாரியான சம்பத்தும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது மனைவி மைதிலியும் தனியாக வசித்து வரும் நிலையில், ஜன்னல் திரை பொருத்துவதற்காக அவர்களது வீட்டுக்கு பாபு என்பவன் சென்றுள்ளான். பொருட்கள் வாங்கி வருவதற்காக பணம் பெற்றுக் கொண்டு கடைவீதிக்குச் சென்ற பாபு, மது அருந்திவிட்டு வந்துள்ளான்.

தம்பதி இருவரும் தனியாக இருப்பதை சாதகமாக்கி, இரும்புக் கம்பியால் இருவரையும் கொடூரமாகத் தாக்கிய பாபு, சம்பத் அணிந்திருந்த 3 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அவர்களது இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் தம்பதியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பாபுவை போலீசார் கைது செய்தனர். தனியாக வசிக்கும் வயதான தம்பதியினர், வீட்டு வேலைக்காக வெளிநபர்கள் வரும்போது, அக்கம்பக்கத்தினரை துணைக்கு அழைத்துக் கொள்வது நல்லது என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments