வீடு ஒன்றில் அடியாட்களுடன் நுழைந்து சேதப்படுத்திய ஊராட்சித் தலைவர்
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் திமுக பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின் என்பவர் ஞாலம் ஊராட்சியில் மின்மயானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அவரை தள்ளிவிட்டு விரட்டியடித்தனர்.
பிராங்க்கிளினுடன் ஆய்வுக்குச் சென்ற நாகர்கோவில் மேயரும் ஆய்வு செய்யாமல் திரும்பிச் சென்றார்.
இதே பிராங்க்ளின் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள வீடு ஒன்றை விலைக்கு வாங்கி, அங்கு குடியிருப்பவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி அடியாட்களுடன் அந்த வீட்டுக்குச் சென்று மின் இணைப்புப் பெட்டியை சேதப்படுத்திய பிராங்க்களின் சிசிடிவி கேமராக்களையும் உடைத்து எடுத்துச் சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
Comments