தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

0 253

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் 5 வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பசி மயக்கத்தில் காரை ஓட்டியதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற இன்னோவா கார் சங்கம் தியேட்டர் சிக்னல் சந்திப்பில் இருந்து தாறுமாறாக ஓடியது. சாலைகளில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் கண்ட இதர வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திய காரை துரத்தி வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே மடக்கி பிடித்து காருக்குள் இருந்த கார் உரிமையாளர் பாரஸ்மால் என்பவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த ரமணி விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்களுக்குப் பயந்து தப்பிஓடினார். பின்னர் காவல்துறையிடம் அவர் சரண் அடைந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி பக்கவாதம் ஏற்பட்டு பின் சரியாகி தற்போதும் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கார் ஓட்டுனர் தெரிவித்தார் . இந்த நிலையில்  மதிய உணவு சாப்பிடாமல்  மாலையில் கார் ஓட்டி வரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு நிதானிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டதாகவும் ஓட்டுநர் ரமணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விபத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் சிக்கி படுகாயம் அடைந்த ஏழு நபர்களை பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அவர்களில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவர்உள்பட 3 பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY