இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள்
இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்திய விமானங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது குறித்து டெல்லியில் விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பு அமைப்பான BCAS சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஜெனரல் ஜூல்ஃபிகர் ஹசனிடம் ஏர் இந்தியா ,ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து நேரில் விளக்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜி ஹசன், பயணிகளின் பாதுகாப்புக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதால் விமானப் பயணிகள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று கூறினார்
Comments