சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடிய இன்னோவா கார் மோதி விபத்து - 7 பேர் காயம்

0 139
சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடிய இன்னோவா கார் மோதி விபத்து - 7 பேர் காயம்

சென்னை வேப்பேரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய இன்னோவா கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

வேப்பேரி நோக்கி வேகமாக சென்ற அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காரை விரட்டிப்பிடித்து அதில் இருந்த தந்தை மகனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரில் உகாண்டா கொடியுடன், அந்நாட்டின் துணைத் தூதரகம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட காகிதம் இருந்த நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments