அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

0 1074
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட மாதேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மாதேஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மாதேஷின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தக்கோலம் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments