பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி மோதியதால் இருசக்கர வாகனத்தின் பின்சீட்டிலிருந்து கீழே விழுந்த சிறுவன் அந்த லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
7ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் யோகேஷ்பாண்டியனை பள்ளிக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையான யமுனா கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments