உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

0 554
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைய நிலம் வழங்கியவர்களுக்கு 31 ஆண்டுகளாகியும் பணத்தை வழங்காததால் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், அலுவலக ஜீப் உள்ளிட்டவை நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டன.

ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சகோதரர்களான வெங்கட்ராமன், சுப்பிரமணியன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அரசு நிர்ணயம் செய்த விலையான 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு 1993ஆம் ஆண்டு வழங்கியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாகியும் பணத்தை தராததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அசல் மற்றும் வட்டியை வழங்க வேண்டும் என மேலூர் வருவாய் கோட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை செயல்படுத்தாததால் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 நாட்களுக்குள் பாதித் தொகையை தருவதாக வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments